நாட்டில் பாதுகாப்பினை பலப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது - பிரிகேடியர் ருவான் வனிகசூரிய
வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் அதிகாரம் சர்வதேசங்களுக்கு இல்லை. எமது நாட்டில் பாதுகாப்பினை பலப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு, கிழக்கில் பெண்கள் பாதிக்கப்படுவதில் இராணுவத்தை பொறுப்புக் கூறமுடியாது. எமது கடமை மக்களை பாதுகாப்புதே தவிர சீரழிப்பதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
வடக்கில் இருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றுவதில் சில அமைப்புகளும் வடக்கின் கட்சிகளும் சர்வதேச அமைப்புகளும் மும்முரமாக செயற்படுகின்றன. இலங்கையில் இன்று அமைதியானதொரு சூழலினை ஏற்படுத்தியதில் இலங்கை இராணுவத்தினரை முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவை இலங்கையர்களுக்கு மட்டுமே தெரியும்.
வடக்கில் இராணுவக் குற்றங்கள் நடந்ததாகக் கூறியே இன்று எமது நாட்டின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.ஆனால்,வடக்கில் பொதுமக்களின் இழப்புகளை விடவும் அதிகமாக எமது இராணுவ வீரர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இவை தொடர்பில் எந்த அமைப்புகளோ அல்லது சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவோ பேசத் தயாராக இல்லை.
மேலும், வடக்கிலும் கிழக்கிலும் கடந்த 4 ஆண்டுகளில் 374 குற்றச்சாட்டுகள், பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 11 குற்றச் சாட்டுகள் மட்டும் இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த 11 முறைபாடுகளதும் சிங்களப் பெண்களினாலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. எவை இவ்வாறான சூழ்நிலையில் வடக்கிலும் கிழக்கிலும் பெண்கள் இராணுவத்தினரால் பாதிக்கப்படுகின்றனர் என முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது.
அதேபோல் தற்போது வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டி வழியுறுத்தினால் எமது இராணுவத்தினர் வாழ்வதற்கான இன்னொரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அரசாங்கம் இராணுவத்திற்கான இடவசதிகளையும் வாழ்வாதார வசதிகளையும் பெற்றுத் தருமானால் நாம் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment