கத்தாரில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு சிக்கல் வருமா..?
கால்பந்து விளையாட்டின் உலக நிர்வாக அமைப்பான ,FIFA, 2022ம் ஆண்டில் கத்தார் நாட்டில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் , அந்த நாட்டில் கோடைக்காலத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக, மழைக்காலத்துக்கு மாற்றப்படவேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்க கமிஷன் ஒன்றை நியமிக்கவிருக்கிறது.
இந்தக் கமிஷன் கால்பந்து அதிகாரிகள் , மருத்துவ வல்லுநர்கள் , ஒலிபரப்பாளர்கள் மற்றும் நிதிஆதரவு தரும் நிறுவனங்கள் ஆகியவர்களுடன் கலந்தாலோசித்து பின்னர் நிர்வாகக் குழுவுக்கு அறிக்கை ஒன்றைத் தரும்.
அடுத்த ஆண்டு வரை முடிவு ஏதும் எடுக்கப்படாது என்று FIFA அமைப்பின் தலைவர் செப் ப்லாட்டர் கூறினார்.
வெப்ப நிலை காரணமாக கத்தார் உலகக் கோப்பைப் போட்டிகளை வேறொரு மாதத்துக்கு தள்ளிவைக்கவேண்டும் என்ற அழுத்தத்துக்கு எதிராக, இந்த மாற்றம் வெவ்வேறு நாடுகளில் உள் நாட்டுக் கால்பந்து போட்டிகளைப் பாதிக்கும் என்ற கவலைகளும் வந்துள்ளன. bbc
Post a Comment