Header Ads



வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் சந்திப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்குமிடையிலான சந்திப்பு வெற்றிகரமாக இடம்பெற்றிருக்கும் நிலையில், 13ம் திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். நகரில் அமைந்துள்ள விடுதியொன்றில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

13ம் திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரங்கள் பகிர்வு தொடர்பில் இந்திய அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கும். வாழ்வாதாரம், புனர்வாழ்வு, புனரமைப்பு போன்றவற்றை மீளக்கட்டியெழுப்ப இந்திய அரசாங்கம் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கும்.

இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினை மிகப்பெரும் பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் அதனை தீர்ப்பதற்காக இரு நாட்டு மீனவர்களும் சேர்ந்து பேசி அதற்கு தீர்வு காணவேண்டும்.

மேலும் அதற்கான ஆதரவினை இரு நாடுகளும் வழங்க வேண்டும் எனவும் கூறிப்பிட்டதுடன், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசி யே தீர்வு காணப்படவேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஷித் குறிப்பிட்டதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி முன்னிலையில் எடுக்கப்பட்ட சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டமை நல்லெண்ண முயற்சி என தெரிவித்ததுடன், கூட்டமைப்பின் மீதுள்ள சந்தேகங்களை களைந்து எதிர்காலத்தில் இணைந்து செயற்பட இது நல்ல முயற்சி எனவும் அவர் பாராட்டியதாக தெரிவித்ததுடன், இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் எனவும் கூறினார்.


No comments

Powered by Blogger.