Header Ads



மலாலா ஒரு மர்மம்..!

(M.S.M.பாயிஸ் - சவூதி அரேபியா)

ஆப்கான் மற்றும் பாகிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதிகளில் சிறார்களின் கல்வி எழுச்சிக்காக பெண்களின் விடுதலைக்காக துணிந்து குரல் கொடுத்தார் என்ற காரணத்துக்காக மேற்கத்திய ஊடகங்கள் மலாலா பற்றி பக்கம் பக்கமாக எழுதுகின்றன. 2013ம் ஆண்டு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஊடகங்களில் அதிக இடம் பிடித்த சிறுமி மலாலா. 2009ம் ஆண்டு தனது 11வது வயதில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மேற்கத்திய நாடுகளின் குண்டுத் தாக்குதல்களுக்கு தினம் தினம் நூற்றுக்கணக்கான சிறார்கள் செத்து மடிய மலாலா என்ற ஒரு சிறுமி மாத்திரம் மேற்கத்தியவாதிகளின் அதியுயர் விருதுகளை வாங்கிக் குவித்துக்கொண்டு இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தலிபான்களால் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளிலும் வசிக்கும் சிறார்கள் மற்றும் பெண்களின் கல்வி மறுக்கப்படுகிறது என்றதொரு பொய்ப் பிரச்சாரம் ஊடகங்கள் வாயிலாக திட்டமிட்டு பரப்பப்படுகிறது. எனவேதான் கல்விக்காக குரல் கொடுத்தார் என்ற வகையில் மலாலாவுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. மலாலா மூலம் தங்களின் பொய்ப் பிரச்சாரத்துக்கு வலு சேர்க்க நினைக்கிறார்கள்.

தாலிப் (கற்பவர்கள் / மாணவர்கள்) என்ற சொல்லில் இருந்து பிறந்ததுதான் தலிபான் என்பதாகும். மேற்கத்திய கலாச்சார முறைமையை இஸ்லாமிய கல்வித் திட்டத்துக்குள் புகுத்த முனையும் கல்வி முறைமையைத்தான் தலிபான்கள் எதிர்க்கிறார்களே அன்றி அவர்கள் பெண்களோ சிறார்களோ கல்வி கற்கக் கூடாது என்று ஒருபோதும் கூறவில்லை.   இஸ்லாமிய வரையறையை மீறாத கல்வியை போதிக்கும் எத்தனையோ கல்விக் கூடங்களை தலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் தங்களின் ஆட்சிக்காலத்தில் நிறுவி இருந்தனர். இன்றும் எத்தனையோ கல்விக் கூடங்கள் ஆப்கான் மற்றும் பாகிஸ்தானில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

ஈராக், அப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, மியான்மார் போன்ற நாடுகளில் குண்டுத்தாக்குதல்களால் அன்றாடம் இறக்கும் குழந்தைகள் பற்றி பேச முன்வராத அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் மேற்கத்தியவாதிகள் ஏன் மலாலாவுக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் வழங்குகிறார்கள்...?

மலாலா என்ற இந்த பாகிஸ்தானிய சிறுமி மேற்கத்திய சியோனிச சக்திகளின் வளர்ப்புக் குழந்தையாக இருக்குமோ என்பதுதான் இன்று பலரின் கேள்வியாகும்.

3 comments:

  1. Next thasleema nasrin nodoght....

    ReplyDelete
  2. This also one reason other one she was in spy team also

    ReplyDelete
  3. My dear sister Malala, It seems the way they raise to top,,,,, they will use you against to all Muslim community. We agree what many muslim groups deny the rights of women and kids is fully against to the teahings of Muhammed (sal). But remember, like you there are many women suffering in their countries..but they are not enlightened by them.

    My sister malala, the best of teaching is from Allah and Muhammed (sal), So I urge you to put effort in your life to learn the Rights of women stated in Quran and Hadees and Do not very much exited by these westerns rewards.

    As a Muslim you should spend more time in your life to prepared yourself for the next world. but I am afraid that now you are made blind of the purpose of our life, under the umbrella of saying " Rights of women " in world.

    ReplyDelete

Powered by Blogger.