Header Ads



அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள்

(ஏ.எல்.ஜனூவர்)

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அண்மைக்காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. அட்டாளைச்சேனை, பாலமுனை, தைக்காநகர் போன்ற இடங்களில் இத்திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

பாலமுனை ஹாட்வெயார் ஒன்றிலும், ஹுசைனியா நகர் வீடு ஒன்றிலும்  பொருட்கள் திருடப்பட்டுள்ளது, அட்டாளைச்சேனை 08ம் பிரிவு வீட்டில் பொருட்கள், நகைகள் திருடப்பட்டுள்ளது. தைக்காநகர் பிரதேசத்தில் திருடச்சென்ற திருடனை அப்பிரதேச மக்கள் மடக்கிப்பிடித்து அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேற்படி திருட்டு சம்பவங்கள் குறித்து உரிமையாளர்கள் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இப்பிரதேச மக்கள் திருடர்கள் குறித்து பொறும் அச்சத்துடன் உள்ளனர்.

1 comment:

  1. அப்போ ஊருக்குள்ளேயே திருடங்கள் அதிகமுள்ளனர் என்று சொல்லுங்கள் ஜனூவர். அனாகரீகமான அரசியல் போக்கும் மதத்தை விட்டு தூரமாகுதலும் இப்படியான கயவர் வேளைகளை ஊக்குவிக்கும்.
    கடவுள் கொடுத்ததை தர்மம் செய்யாமல் முடக்கி வைத்திருப்பவர்களுக்கும் இப்படியாக அழிவு/திருட்டு அதுவாகவே நடைபறும்.

    ReplyDelete

Powered by Blogger.