இஸ்ரேல் யூதர்களின் தேசம் என்பதை பலஸ்தீனர்கள் ஏற்க வேண்டும் - பென்ஜமின் நெதன்யாகு
உண்மையான அமைதி ஏற்பட பலஸ்தீனர்கள் இஸ்ரேல் யூதர்களின் தேசம் என்பதை ஏற்க
வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
"யூத மக்களின் தேசத்தை மறுப்பதை பலஸ்தீனர்கள் கட்டாயம் விட்டுவிடவேண்டும்" என்று
டெல் அவிவுக்கு அருகிலிருக்கும் பார் இவான் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம்
ஆற்றிய உரையின்போது நெதன்யாகு கூறினார்.
இவ்வாறான அங்கீகாரம் மூலம் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவந்து ஒரு தீர்வை
எட்ட முடியும். ஆனால் அது செயற்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று ஆண்டுகள் தடைப்பட்ட இஸ்ரேல்- பலஸ்தீன நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை
அமெரிக்க மத்தியஸ்தத்தில் கடந்த ஜூலையில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த
பேச்சுவார்த்தைக்கு 9 மாத கெடு விதிக்கப்பட்டுள்ளது. tn
Post a Comment