நேபாளத்தில் புத்தளம் நகரபிதா
அரசாங்கத்தின் புத்தளம் தொகுதி பிரதான அமைப்பாளரும் புத்தளம் நகர முதல்வருமாகிய கே.ஏ பாயிஸ் அவர்கள், ஐந்தாவது முறையாக நடைபெறும் தெற்காசிய நாடுகளின் சுகாதாரமான குடிநீர் தொடர்பான மாநாட்டில் (SACOSAN - South Asian Conference On SANitation ) பங்கேற்பதற்காக இன்று அதிகாலை நேபாளம் நோக்கி பயணமானார்.
இம்மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டில் நடைபெறும் இந்நிகழ்வில், தெற்காசிய நாடுகளை பிரதிநிதுத்துவப்படுத்தி 400 பங்கேற்பாளர்களும், பிராந்திய பங்காளர்களும் சர்வேதேச வல்லுனர்களும் பங்குபெறவுள்ளனர்.
இம்முறை நேபாளத்தில் "Sanitation for All: All for Sanitation" எனும் சுலோகத்தை பிராதனப்படுத்தி பிராந்தியத்தின் சுகாதாரமான குடி நீர் தொடர்பான இந்த மாநாட்டில், பங்குபற்றுகின்ற நாடுகளின் விளக்க காட்சிகளும், நிபுணர்கள் பங்குகொள்ளும் கலந்துரையாடல்களும், எட்டுத் தலைப்புகளை கொண்டமைந்த அமர்வுகளும், அத்தோடு கண்காட்சி மற்றும் வேறு சில நிகழ்வுகளும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
2003ஆம் ஆண்டு பங்களாதேஷிலும், 2006ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும், 2008ஆம் ஆண்டு இந்தியாவிலும், 2011ஆம் ஆண்டு இலங்கையிலும் இடம்பெற்றுவந்த மாநாடுகளின் தொடராகவே இம்முறை நேப்பாளத்தில் ஐந்தாவது முறை நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment