Header Ads



கல்முனை மக்களின் வரிப்பணத்தை, விரயம் செய்யும் மாநகர நிர்வாகம் - ஆணையாளரே விழித்தெழுங்கள்

மக்களின் வரிப்பணத்தை கல்முனை மாநகர நிருவாகம் வீண் விரயம் செய்கிறது. இந்த விடயம் தொடர்பாக மாநகர ஆணையாளரிடம் பல முறைப்பாடுகள் செய்தும்  ஆணையாளரோ அல்லது அவரின் கீழ் உள்ள அதிகாரிகளோ நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை .

 இன்று (20.10.2013)  காலை 7.30 மணி வரை வீதி விளக்கு எரிந்து கொண்டே இருந்தது .இதற்கான  மின்கட்டணம்  எங்களிடம் தானே அறவிடப்படுகிறது இன்று காலை பத்திரிகை கடையொன்றின் முன்னால் கூடி நின்ற கல்முனை குடியை சேர்ந்த சிலர்  முணு முணு த்தனர்.

மாதம் ஒன்றுக்கு  60ஆயிரம் ரூபா  தெரு மின் விளக்கு  மின் கட்டணம் மாநகர சபையினால்  செலுத்தப்படுவதாக அவ்விடத்தில் நின்ற கல்முனை மாநகர சபை முக்கியமான அரசியல்வாதி  ஒருவரின்  உதவியாளரென கூறப்படுபவரால்  தெரிவிக்கப்பட்டது. இதனை  கேட்டிருந்த ஒருசிலர்  இதனை கூட கவனிக்க முடியாத  ஆணையாளர்  மாநகர சபையில்  தூங்கி கொண்டிருக்கிறாரா என கேள்வி எழுப்புகின்றனர். 

ஆணையாளரே விழித்தெழுங்கள்......


No comments

Powered by Blogger.