மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேந்திரன்,சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செலியன்,மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், படை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
'முன்னேற்ற மீளாய்வும் திட்டங்களுக்கான அனுமதியும்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகளின் முன்னேற்றம் மற்றும் மீளாய்வு தொடர்பாகவும் நிதியொதுக்கீடுகள் தொடர்பாகவும் குறிப்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட திவிநெகும வேலைத்திட்டம் அதனூடாக மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்திகள்,மேற்கொள்ளவுள்ளமை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment