Header Ads



கல்முனையில் பசும் பால் அருந்தும் திட்டம் ஆரம்பித்துவைப்பு

 (யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களம்  கிழக்கு மாகான சபை விவசாய அமைச்சின் அனுசரணையுடன் பசும் பால் அருந்தும்  திட்டத்தை இன்று முதல் 01.10.2013 கல்முனையில் ஆரம்பித்துள்ளது .

கல்முனை கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.ஜிப்ரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட கால்நடை வைத்திய திணைக்கள பணிப்பாளர் டாக்டர் எம்.சீ.எம்.ஜுனைட்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் .

இன்றைய தினம் 50 லீற்றர் பசும்பால்  இலவசமாக வழங்கி வைக்கப் பட்டுள்ளது. சுமார் 500 பொது மக்கள்  இன்றைய தினத்தில்  பாலை அருந்தி உள்ளனர்  என கால்நடை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.