ஓமான் நாட்டு கடலில் மூழ்கி இலங்கையர் மரணம்
(Adt) ஓமான் நாட்டின் சலாலாஹா எனும் பகுதியில் கடலில் மூழ்கி இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக ஓமான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பெருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அறுவர் தக்கா கடற்கரைக்கு நீராடச் சென்றிருந்த வேலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடலில் நீராடிய அறுவரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
50 வயதுடைய ஹெரத் என்ற இலங்கை பிரஜையும் 50 வயதுடைய வல்சகுமார் என்ற இந்திய பிரஜையுமே உயிரிழந்துள்ளதாக ஓமான் செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment