பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் பௌத்த பிக்குகளை விசாரிக்க தனி பொலிஸ் பிரிவு (வீடியோ)
காவியுடையணித்த பிக்குகளால் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள விசேட காவல்துறை பிரிவொன்றை அமைக்குமாறு புத்தசாசன அமைச்சின் செயலாளர் காவல்துறை மா அதிபரிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு காவல்துறை மா அதிபரும் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று 31-10-2013 பொது பல சேனா அமைப்பு மற்றும் புத்தசாசன மற்றும் ஆன்மீக விவகார அமைச்சின் செயலாளர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது..
புத்த சாசன அமைச்சின் செயலாளரினால் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்ட தகவல் தொடர்பில் அறிந்து கொள்வதற்கோ பொது பல சேனா குறித்த அமைச்சின் செயலகத்திற்கு சென்றது.
இது தவிர புத்த சாசன அமைச்சினால் புத்த சாசனத்தை பாதுகாப்பதற்கான போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இதனிடையே, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், புத்த சாசன அமைப்புக்குள் நுழைய முற்பட்ட போது, அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தீவிர நிலை ஏற்பட்டது.
புத்தசாசன அமைச்சின் செயலாளர் எம்.கே.பி.திசாநாயக்க குறி;த்த இடத்திற்கு சென்று குறித்த பிக்குகளை கலந்துரையாடலுக்கு அழைத்துச் சென்றார்.
வர்இகளுக்கு தனி போலிஸ் தனி நீதிமாற்றம் அப்போ அதற்க்கு இவர்கள் துரவியானது .விசாரணை முடிந்து எங்கே ஜெயிலில் இடுவது அதற்கும் தனியான ஜெயில் இருந்தால் மிகவும் நல்லது ஏன் என்றால் ஜெயிலிலும் பாலியல் துஸ்பிரயோகம் நடந்தால் வலிய தெரியவராது .வெளிநாட்டு பத்திரிகைகாரர்களுக்கு solla வேண்டாம் காரி துப்புவார்கள் .
ReplyDelete