தமது பெயர் குறிப்பிடப்படாவிட்டால் மக்கள் பத்திரிகைகளை வாசிக்க மாட்டார்கள் - மேர்வின்
தமது பெயர் குறிப்பிடப்படாவிட்டால் மக்கள் பத்திரிகைகளை வாசிக்க மாட்டார்கள் என சர்ச்சைக்குரிய பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். பத்திரிகைகளை விற்பனை செய்யும் உத்தியாக தமது பெயரை சில ஊடகங்கள் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தம்மைப் பற்றிய கேலிச்சித்திரமோ அல்லது செய்தியோ இருந்தால் மட்டுமே பத்திரிகைகள் விற்பனையாவதாகத் தெரிவித்துள்ளார். தமது இணைப்புச் செயலாளர் எவரும் கடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தமக்குத் தெரிந்தவர் ஒருவர் கடத்தப்பட்டு உள்ளதாகவும் இது குறித்து ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு சேவையாற்றும் தமது நோக்கத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். gtn
Post a Comment