ஆசிரிய சங்கங்களின் குரல்கள் அலட்சியப்படுத்தப்படுவது விபரீதத்தை ஏற்படுத்தும் !
நாட்டில் ஆசிரியர் தொழிற் சங்கங்களின் குரல்கள் அலட்சியப்படுத்தப்படுவது ஆரோக்கியமான கல்விச்சூழலை ஏற்படுத்தாது.ஆசிரியர்கள் இல்லாமல் கல்வி இல்லை. கல்வியியலாளர்கள் ஆய்வுமூலம் எடுத்தியம்பிய விடயங்களை மேடைகளில் வாய்கிழிய முழங்கிவிட்டு நடைமுறையில் சில அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக செய்ற்பட்டுவருவதை இனியும் அனுமதிக்கமுடியாது.
இவ்வாறு உலக ஆசிரியர் தின செய்தியில் இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்செய்தியில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆசிரியர் சம்பள விடயத்தில் அரசாங்கம் இன்னும் பாராமுகமாக இருப்பது வேதனைக்குரியது. ஆசிரியர்களின் குறைந்த பட்ச சம்பளம் ருபா 30 ஆயிரமாக இருக்கவேண்டுமென எமதுசங்க தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அரசாங்கத்திற்கு அறிவத்துவந்துள்ளோம்.
2008.09.08ஆம்திகதிய உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி 2008.07.01முதல் அமுலாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளுக்கான புதியசேவைப் பிரமாணக்குறிப்பு இதுவரை அமுலுக் குக் கொண்டு வரப்படவில்லை.
மாறாக 28ஃ2010ஆம் இலக்கச் சுற்றறிக்கை மூலம் அமுலாக்கும் திகதியை 2011.01.01 முதல் என்று பிற்போட்ட அரசு, 2013 ஒக்டோபர் ஆகியும்;, அரசசேவை ஆணைக்குழு 2013.04.26இல் அங்கீகரித்த புதிய பிரமாணக் குறிப்பை இதுவரை வெளியிடவில்லை.இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு இரண்டாவது நாளில் அதனை 6ஃ2006(ஏஐஐஐ) ஆம் இலக்கச் சுற்றறிக்கையாக 2010.01.05இல் வெளியிட்டிருந்தது.
சேவைப் பிரமாணக்குறிப்பு வெளியிடப்படாமையினால் இதுவரை அச்சுற்றறிக்கை ,அமுல் செய்யப்படாமல் கிடப்பில் உள்ளது.
பிரமாணக்குறிப்பை வெளியிடாது காலம் கடத்திவரும் அரசு, 2005/04 சுற்றறிக்கைக் கமைவான பதவி உயர்வுக்காக 2011/30 சுற்றறிக்கையை வெளியிட்டு,பதவி உயர்வு வழங்கும் இறுதித் திகதியை 2010.12.31ஆக மட்டுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உயர்கல்வி மற்றும் தொழிற்றகைமையை அடிப்படையாகக் கொண்டு, துரிதபதவி உயர்வுக்குத்தடையை ஏற்படுத்தியுள்ள அரசு, 2011.01.01க்குப்பின்னரான பதவிஉயர் வையும் மறுத்து வருகின்றது.
6/2006(ஏஐஐஐ)ஆம் இலக்கச் சுற்றறிக்கை இன்னும் கிடப்பிலேயே இருக்கின்றது. இந்நிலையில், 6/2006சுற்றறிக்கை மூலம் முரண்பாட்டைத் தீவிரமடையச் செய்துள்ள அரசு, 6/2006(ஐஏ) சுற்றறிக்கை மூலம் சம்பளப்படியேற்றப் பெறுமதிகளை அதிகரித் தல் என்ற பெயரில் சம்பள ஏற்றங்கனின் எண்ணிக்கைகளைக் குறைத்தும் உள்ளது.
கிழக்கில் ஆசிரிய இடமாற்றசபையின் அங்கீகாரமின்றி எந்தஒரு இடமாற்றமும் இடம்பெறாது என்று பகிரங்கப்படுத்திவிட்டு விரும்பியவாறு ஆசிரியர்களை இடமாற்றுவது முறையல்ல. இடமாற்றம் ரத்து என்று அறிவித்துவிட்டு சில பணிப்பாளர்களின் சொந்தவிருப்புவெறுப்புக்கிணங்க நல்லாசிரியர்களை இடமாற்றிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இவை தொடருமானால் இடமாற்றசபைகளை பகிஸ்கரிக்கநேரிடும்.
நவராத்திரி காலத்தில் முன்னோடிப்பரீட்சையை நடாத்தவேண்டாமென்று குரல் கொடுத்தோம். ஆனால் சாதகமான பதிலில்லை. இந்து அமைப்புகள் என முழக்கமிடுவோர் சிலர் இவ்விடயத்தில் பாராமுகமாய் இருந்தமை வேதனைக்குரியது. இது இந்து சமய மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
நெடுங்காலம் ஒரே வலயத்தில் கடமையாற்றிக் கொண்டு தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டுவரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்வி வலயம் ஒன்றின் கல்விப்பணிப்பாளர் தனது தகாத செயற்பாடுகளுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முட்டுக் கட்டையாக இருப்பதாக பொய்யான பரப்புரைகளைச் செய்து அதிபர், ஆசிரியர்களை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திடமிருந்து பிரிப்பதற்கு முயற்சிப்பதாக நம்பகரமாக அறிய முடிகின்றது.
இதன் ஒருகட்டமாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பெயரில் இன்னுமொரு சங்கத்தை உருவாக்க முற்படுவதாகவும், இதற்குத் துணையாக ஓரிரு அதிபர்களைப் பயன்படுத்துவதாகவும் அறிப்படுகின்றது.குறித்த வலயத்தின் அதிபர்கள்; ஆசிரியர்களுக்கு நாம் விடுக்கும் மிகவும் முக்கியமான செய்தி யாதெனில், பிரிவினையால் நாம் பல சந்தர்ப்பங்களில் பலவற்றை இழந்திருக்கின்றோம். இது பலதடவைகள் தமது சுயலாபத்திற்காக ஒருசில விசமிகள் பயன்படுத்திய தவறான வழிமுறைகளாகும். இந்த வழிமுறைகளைக் கையாண்டவர்கள் நெடுங்காலம் சமூகத்தில் நிலைத்ததில்லை. எமது சமூகம் சார்ந்தவர்கள் என்பதால் பல தடவைகள் நாம் பொறுமையைக் கடைப்பிடித்திருந்தோம். இனிமேலும் பொறுத்துக்கொள்ளமுடியாத அளவுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கம் மீதான அவதூறுகள் அதிகரிப்பதால் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
குறித்த வலயக்கல்விப்பணிப்பாளர் ஏலவே ஒருவருடம் பணியாற்றிய வலயத்தில் செய்த தில்லுமுல்லுகளை நாம் அறிவோம். அதற்கான விசாரணைகளை கிழக்கு கல்வியமைச்சு மேறகொண்டுவருவதையும் அறிவோம்.ஒரு பழைய பெயர்ப்பலகைக்கு 82 ஆயிரம் ருபாவை எடுத்த சங்கதியையும் நாமறிவோம். அது மட்டுமல்ல அங்குசெய்த சகல மோசடிகளுக்குமான ஆதாரங்களை திரட்டியுள்ளோம். விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.
எனவே எமது உரிமைக்குரிய அங்கத்தவர்கள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்கும் தருணம் வந்துள்ளதால் எடுப்பார் கைப்பிள்ளைகளாகத் தொழிற்படுவோரின் நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் எமக்கு அறியத்தருவதுடன், எந்தவிதமான பிரிவினைக்கும் இடமளிக்கவேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றோம். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் உங்களுடையது, உங்களால் கட்டி வளர்க்கப்பட்டது என்பதனை நினைவில் வைத்திருங்கள்.
நாம் ஆசிரியர்களின் நலன்களுக்காகவும் மாணவரின் கல்வி மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிப்புகளின் மத்தியில் நாடளாவியரீதீயில் சேவையாற்றிவருகின்றோம். நாம் ஒரு வலயத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவர்கள் அல்ல. உணர்வுள்ள தமிழர் ஆசிரியர்களைக் கொண்டுள்ள இச்சங்கத்தின் சக்தியை சாதாரண எதிர்ப்புகளுக்குப் பயன்படுத்துவதில்லை. ஊழல் மோசடி அராஜகம் செய்துகொண்டு நல்ல அதிகாரி எனக் காட்ட முற்படுகின்றபோது உண்மைக்குண்மையாக இரவுபகலாக அர்ப்பணிப்புடன் கல்வி அபிவிருத்திக்காகப் பாடுபட்டுவருகின்ற நேர்மையான ஏனைய கல்விப்பணிப்பாளர்களின் கௌரவம் நற்கீர்த்தி என்னாவது?
வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் இலங்கை ஆசிரியர் சங்கம்இ தமிழர் ஆசிரியர் சங்கம் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களை உள்ளடக்கியதாக 'ஆசிரியர் இடமாற்ற சபை' என்னும் அமைப்பு ஒவ்வொரு கல்வி வலயங்களிலும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான தீர்மானத்தினை எடுத்து வருகின்றது.
இந்த அமைப்பானது, வடமாகாணத்தில் அமைந்திருக்கும் 12 கல்வி வலயங்களிலும் இயங்கி வருகின்றது.
மேற்படி ஆசிரியர் இடமாற்ற சபையானது யாழ்.கல்வி வலயத்திலும் இருக்கின்றபோதும்இ யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றமானது இடமாற்ற சபைக்குத் தெரியாமலும்இ முறைகேடான விதத்திலும் கல்வி வலயத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தெரிவித்தார்.
வடமாகாண சபைத் தேர்தல் முடிவடைந்தும்இ முறையான மாகாண சபை நிர்வாகமானது இன்னமும் உருவாக்கப்படாத நிலையில் இடமாற்ற சபைக்கு தெரியாமல் அவசர அவசரமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த இடமாற்றமானது அரசியல் காரணங்களுக்காக இருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.
எனவே ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களின் பெருமைகளை மட்டும் பேசாது அவர்களுக்கான உரிமைகளையும் வசதிகளையும் செய்துகொடுத்தல் வேண்டும்.ஆசிரியர் தொழில் இன்று பலசுமைகளுடன் பல சவால்களை தாண்டி வீறுநடைபோடுகிறது. அவர்களுக்காள அழுத்தங்கள் தினம்தினம் அதிகரித்துச் செல்கிறது. ஆசிரியர்களின் மனங்கள் வெல்லப்பட்டாலன்றி எந்த சுற்றுநிருபமும் சிறப்பான அடைவை ஏற்படுத்தாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
Post a Comment