அமைச்சர் உதுமாலெப்பையின் கவனத்திற்கு..!
(யு.எம்.இஸ்ஹாக்)
உலக வங்கியின் நிதியொதுக்கிட்டின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி. நீர்ப்பாசனம். வீடமைப்பும் நிர்மாணம் . கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 69 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட நற்பிட்டிமுனை பாண்டிருப்பு எல்லை வீதிக்கான அங்குராப்பண நிகழ்வு கடந்த 22 ஆகஸ்ட் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது.
இவ்வீதிக்கான அங்குராப்பண வைபவம் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுள்ளா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி. நீர்ப்பாசனம். வீடமைப்பும் நிர்மாணம் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்து.
இந்த வீதி நிர்மாணிப்பின் போது நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயம் முன்பாக சிறிய பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் முறையாக அமைக்கப்படாமையால் பாலத்தின் கீழ் நீர் தேங்கி கிடக்கின்றன. இதனால் இப்பபாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு வாரம் அனுஸ்டிக்கும் இக்கால கட்டத்தில் அமைச்சர் உதுமா லெவ்வை இந்தப் பாலத்தையும் பாடசாலையையும் மாணவர்களின் நலன் கருதி கவனத்தில் எடுப்பாரா..?
Post a Comment