Header Ads



சமூகம் பல்வேறு தேவைகளை வேண்டி நிற்கின்றது - ஆரிப் சம்சுடீன்

(எம்.எம்.ஏ. ஸமட்)

தலைமைத்துவம் உட்பட உறுப்பினர்களின் ஒற்றுபட்ட கூட்டுப்பொறுப்புடனான செயற்பாடுகளே ஒரு தன்னார்வு நிறுவனத்தினது ; செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக்குமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் குறிப்பிட்டார்.

சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருதிக்கான (சிடா) அமைப்பின் தலைமையகத்தில்  நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

எந்தவொரு தன்னார்வு தொண்டு நிறுவனமும் அதன் செயற்பாட்டை வினைத்திறன் மிக்கதாக்க வேண்டுமாயின, தலைமைத்துவம் உட்பட அந்நிறுவன உறுப்பினர்களிடையே விட்டுக்கொடுப்பு,புரிந்துணர்வு, ஏற்றுக்கொள்ளும் மனப்பான்கு, கூட்டுப்பொறுப்புடனான செயற்பாடுகள், குழுச் செயற்பாடுகள், நம்பகத்தன்மை, ரகசியங்களைப் பேணுதல் போன்றவை காணப்படுதல் அவசியம்.

அவ்வாறில்லாத சந்தர்ப்பத்தில், அவ்வமைப்பினால்  வெற்றியுடன் செயற்பட முடியாது. பல்வேறு அமைப்புகள் சமூக நலன் கருதி ஆரம்பிக்கப்படுகின்றபோதிலும் அவை குறுகிய காலங்களுக்குள் செயற்பாடுகளை இழந்துவிடுகின்றன. இவற்றுக்குக் காரணம் மேற்கூறிய பண்புகள் இல்லாமல் போய்விடுவது என எண்ணுகின்றேன்.

சமூக நலன் கருதி சமூகப்பணிக்காக வருபவர்கள் சின்னச்சின்ன அற்ப விடயங்களை புறந்தள்ளி தமது அமைப்பின் இலக்கை அடைவதற்கு சகலருடனும்; இணைந்து செயற்பட முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் அமைப்பின்  இலக்கை குறுகிய காலங்களுக்குள் அடைவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

சமூகம் பல்வேறு தேவைகளை வேண்டி நிற்கின்றது. சமூகத்தின் தேவைகள் அடையாளம் காணப்பபட வேண்டும். அத்தேவைளை  எவ்வாறு நிறைவேற்றலாம்? அதற்கான வழி எங்கே இருக்கிறது? என்பதைக் கண்டறிந்து அதற்கான திட்டமிடலை ஒழுங்கான முறையில் வகுத்துச் செயற்படுகின்றபோது நாம் எதிர்பார்க்கும், மக்கள் எதிர்பார்க்கும் தேவைகள் நிச்சயம் நிறைவேறும் சாத்தியம் ஏற்படும்.

அரசியல் வாதிகளினால் மாத்திரம் மக்கள் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நினைப்பது தவறு என்று நினைக்கின்றேன். ஒவ்வொருத்தருக்கும் முடியும் மற்றொருவரின் தேவையை நிறைவு செய்வதற்கு. ஆனால் அதற்கான முயற்சிகள் நம்மில் பலரால் மேற்கொள்தில்லை. 

கல்முனைப் பிரதேச மக்களின் பல தேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வாழ்வின் ஒளி செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இப்பிரதேசங்களிலுள்ள தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் சமூகம் வேண்டிநிற்கின்ற தேவைகளில் ஒரு தேiவையாவது அடையாளப்படுத்தி அவற்றை நிறைவேற்றி வைப்பதற்கு முன்சொல்லப்பட்ட பண்புகளுடன் செயற்படுகின்றபோது, நிச்சயம் இப்பிரதேச மக்களின் பல தேவைகள் நிறைவுக்குவரும். அவற்றை மையப்படுத்தி இப்பிரதேசத்திலுள்ள சகல அமைப்புக்களும்  நற்சிந்தனையுடன் செயற்படுவது அவசியமென வேண்டுகின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.