Header Ads



வருங்காலத்தில் நான் ஒரு அரசியல்வாதியாக இருப்பேன் - மலாலா

தான் ஒரு அரசியல்வாதியாக மாற விரும்புவதாக மலாலா, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

வருங்காலத்தில் நான் ஒரு அரசியல்வாதியாக இருப்பேன். எனது நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்க விரும்புகிறேன். நாட்டில் கல்வியை கட்டாயமாக்க விரும்புகிறேன். பாகிஸ்தானில் மக்கள் சுதந்திரமாக வாழ்வார்கள். அவர்களுக்கான உரிமையை பெறுவார்கள். அங்கே அமைதி நிலவும். ஒவ்வொரு சிறுமி-சிறுவர்களும் பள்ளிக்கு செல்வார்கள். அந்த நாள் விரைவில் வரும் என்று நான் நம்புகிறேன்.  

இங்கு பிரிட்டனின் கலாச்சாரத்தை கண்டு அதிர்ந்து போனோம். இங்கு மக்கள் இவ்வளவு சுதந்திரமாக இருப்பார்கள் என்று நாங்கள் (குறிப்பாய் எனது அம்மா) ஒருபோதும் நினைக்கவில்லை. பெண்கள் எந்த சந்தைக்கும் சென்று வரலாம். அவர்கள் ஆண்கள், தம்பிகள், தந்தையர் துணையில்லாமல் வெளியே எங்கும் சென்று வர முடிகிறது. 

நான் மேற்கத்தியராக மாற விரும்பவில்லை. நான் எனது நாட்டின் கலாச்சாரத்தை, பஸ்தூன் கலாச்சாரத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். நான் பாகிஸ்தானுக்கு திரும்பவே விரும்புகிறேன். 

பாகிஸ்தானின் அமைதியை கொண்டுவர தலிபான்களுடனான பேச்சுவார்த்தை மிக அவசியம். பிரச்சினைகள் மற்றும் சண்டைக்கு முடிவு கட்ட பேச்சுவார்த்தையே சிறந்த வழி. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அமெரிக்கா கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். 

தலிபான்கள் அவர்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள் என்பது மிக முக்கியம். அவர்கள் விரும்புவது என்னவோ அதை பேச்சுவார்த்தையின் மூலமே செய்யவேண்டும். மக்களை கொல்வது, துன்புறுத்துவது, அடிப்பது இஸ்லாத்திற்கு எதிரானது. அவர்கள் இஸ்லாத்தின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள். 

இவ்வாறு மலாலா கூறினார். 

No comments

Powered by Blogger.