பொங்கி வந்த சிரிப்பை கைகளால் மறைத்த மலாலா - ராணியின் முன் அடக்கமாக இருக்க வேணடுமாம்..
இங்கிலாந்து ராணி எலிசபத்தும் மலாலாவை சந்திக்க அழைப்பு அனுப்பினார். லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு தந்தை ஜியாவுதீனுடன் சென்ற அவர், தனக்கு தலிபான்களால் நேரிட்ட அவலம் தொடர்பாக எழுதிய ‘ஐ ஆம் மலாலா’ என்ற புத்தகத்தை ராணிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இங்கு வந்ததை நான் உயரிய கவுரவமாக கருதுகிறேன். இங்கிலாந்து உள்பட எல்லா நாடுகளிலும் வாழும் நிறைய குழந்தைகள் கல்வி உரிமை பெறாமல் உள்ளனர். நிறைய குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.
அவர்களின் கல்விக்காக எனது பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று ராணியிடம் மலாலா கூறினார்.
அப்போது இடைமறித்த ராணியின் கணவர், ‘எங்கள் நாட்டில் பிள்ளைகளை வீட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளுக்கு அனுப்பி விடுகின்றனர்’ என்று நகைச்சுவையாக கூறினார்.
ராணியின் எதிரில் அடக்கமாக இருக்க வேணடும் என்பது மரபு. இதையறிந்த மலாலா முகத்தில் பொங்கி வந்த சிரிப்பை கைகளால் மறைத்துக் கொண்டார்.
Post a Comment