வெள்ளை மாளிகை உத்தரவுபடியே வெளிநாட்டு தலைவர்களை ஒட்டுக் கேட்டோம்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் செய்யும் உளவு வேலைகள் பற்றி அதிபர் மாளிகையில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்குத் தெரியும் என்று அமெரிக்க பத்திரிகையான லாஸ் ஏஞ்சல்ஸ் தெரிவித்துள்ளது.அமெரிக்க உளவுத்துறையினரிடம் உலகின் 35 நாட்டுத்தலைவர்களின் தொலைபேசி ஈமெயில்கள் கண்காணிப்பு பற்றி எடுத்த பேட்டி ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பெயர் சொல்லவிரும்பாத உளவுத்துறை அதிகாரி கூறிதாவது:“எந்த தலைவரை கண்காணிக்கவேண்டும். எத்தனைநாட்களுக்கு கண்காணிக்கவேண்டும் என்ற உத்தரவு வெள்ளை மாளிகையில் இருந்து வரும்.
கண்காணிக்கப்படும் தலைவரைப் பற்றிய செய்திகள், தினமும் வெள்ளைமாளிகையில் அதற்கென குறிப்பிட்ட அதிகாரியிடம் தரப்படும். கண்காணிக்கப்படும் நாட்டுக்கான அமெரிக்க தூதரும் 2 மூத்த வெள்ளை மாளிகை அதிகாரிகளும் தரப்படும் தகவல்களை வடிகட்டுவர். தேவையான மற்றும் பரபரப்பான தகவல்கள் உடனுக்குடன் சொல்லப்படும். அதனால் எதுவும் தெரியாமல் செய்யவில்லை. இப்படி அதிபர் மாளிகைக்கு தெரியாமல் நாங்கள் செய்தோம் என்று சொல்வது சரியல்ல. இது உளவுத்துறையை சஙகடப்படுத்தும் செயல்’’ என்றார்.
Post a Comment