Header Ads



கல்முனை மாநகர ஆணையாளரை இடமாற்றம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கல்முனை மாநகர சபை ஆணையாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் தகுதியானவர்  நியமிக்கப் பட வேண்டும்  எனவும், நிரந்தர கணக்காளர்  வேண்டும் எனவும்  கல்முனை மாநகர சபை மாதாந்த கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை  மாதாந்தக் கூட்டம் இன்று முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடை பெற்றது. 

 அடுத்த ஆண்டுக்கான  நிதிக்குழு உறுப்பினர்களை  தேர்வு செய்யும் விடயத்தில்  வாக்கெடுப்பு இடம் பெற்றது.19 பேரைக்கொண்ட கல்முனை மாநகர சபையில் மேயர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.  இரகசிய வாக்கெடுப்பில் எஸ். ஜெயகுமார் (16 வாக்குகள்), ஏ.எம்.றியாஸ் (14 வாக்குகள்), எஸ்.உமரலி (12 வாக்குகள்), ஏ.பறக்கதுல்லாஹ் (11 வாக்குகள்) மற்றும் ஏ.ஏ.பஷீர் (10 வாக்குளை) ஆகியோர்  நிதிக்குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டனர்.

கல்முனை மாநகர சபைக்கு நிரந்தர கணக்காளர் இல்லாமையால் நிரந்தரமான கணக்காளர் ஒருவரை நியமிக்க சபை ஏகமனதாக தீர்மானித்தது. அதே போன்று கல்முனை மாநகர சபைக்கு  நிருவாக சேவை தரம் 01  பதவி  வெற்றிடத்துக்கு  தரம் 03  நிலையில் உள்ள ஒருவரை  நியமித்திருப்பதனால்  நிருவாகத்தை சீராக  எடுத்து செல்ல முடியதிருப்பதாக சில உறுப்பினர்கள்  முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர் .. அதனை அடுத்து  தற்போது இருக்கின்ற  ஆணையாளரை இடமாற்றிவிட்டு தரம் 01 ஆணையாளர் ஒருவரை நியமிக்க  தீர்மானிக்கப் பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.