முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவரை கிழக்கு முலமைச்சராக அரசு நியமிக்கும் என நம்பவில்லை
அரசாங்கம் கிழக்கில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறினால், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்கப் போவதாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலர் ஹசன் அலி கருத்து வெளியிடுகையில்,
“2012இல் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அரசாங்கத்துக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில், பல விடயங்களை உள்ளடக்கிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது.
அந்த இணக்கப்பாட்டில், மாகாணசபை அமைக்கப்பட்டதும், மாகாண முதல்வர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகள், இரண்டரை ஆண்டுகளுக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படும் என்பதையும் உள்ளடக்கியிருந்தது.
சபை அமைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தற்போது கிழக்கு மாகாண முதல்வராக உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவருக்குப் பதிலாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவரை நியமிக்க அழுத்தம் கொடுக்கவுள்ளது.
2012 மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், காணி, மீள்குடியமர்வு, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளது.
அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி, முஸ்லிம்கள் எதிர்கொள்ளும், காணிப் பிரச்சனைகள், இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், முஸ்லிம்களுடன் இணைந்து பணியாற்ற, முதூருக்கு தமிழ்பேசும் அரசாங்க அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுள்ளது.
அரசாங்கம் தனது வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, 2015இல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவரை கிழக்கு மாகாண முதல்வராக சிறிலங்கா அரசாங்கம் நியமிக்கும் பொறுப்பை நிறைவேற்றும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்பவில்லை.
அரசாங்கம் தனது கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறினால், கிழக்கு மாகாணசபையில் உள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 7 உறுப்பினர்களும் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பார்கள்.
அரசாங்கத்துடன் எதிர்காலத்தில் இணைந்திருப்பதா என்பதை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் கலந்துரையாடும்” என்றும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து கொண்டு பதவிகள் பற்றி மட்டும் தான் பேசுங்கோ, வோட்டு போட்ட அப்பாவி மக்களுக்கு நீங்க என்னத்த கொடுத்து இருக்கயல், தலைவர் எங்க நல்ல வாசு இரிக்கி எண்டு பாக்கிறார், வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்கள்ள பூமி என்று தெரிந்தும் , அரசுக்கு வக்காலத்து வாங்கி எங்களையெல்லாம் வித்து நீங்கள் எல்லாம் சொகுசு வாழ்க்கை வாழுங்கோ, அல்லாஹ் ஒங்களயெல்லாம் சும்மா விடமாட்டான்.
ReplyDeleteஅது சரி , முஸ்லிம் காங்கிரசில சேர்ந்த காலம் முதல் இந்த ராவுத்தர் இதே போசைத்தானே கொடுக்கிறார். சுத்திபாருங்கோ எல்லாம் மாறிப்போயிட்டுங்கோ.
ReplyDeleteமுஸ்லிம்களும் வோட்ட மாறிப்போட தொடங்கிட்டாங்கோ.
what a shame to you and your party.
ReplyDelete