Header Ads



அட்டாளைச்சேனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீர்ப்பாசன வாரம்


 (ஏ.எல்.ஜனூவர்)

அட்டாளைச்சேனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீர்ப்பாசன வாரத்தினை முன்னிட்டு மீனோடைக்கட்டிலிருந்து கோணாவத்தை பெரிய பாலம் வரையிலான வடிச்சல் திட்டத்தின் ஆரம்ப பணிக்கான இடங்களை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை 18-10-2013 நேரில் சென்று பார்வையிட்டார்.

அமைச்சருடன் கோணாவத்தை அபிவிருத்திக்குழு பிரதிநிதிகளும், பிரதேச விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும்; கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களமும், மத்திய நீர்ப்பாசன திணைக்களமும் இணைந்து இந்த நீர்ப்பாசன திட்டத்தினை அட்டாளைச்சேனையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடாத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.