Header Ads



'இலங்கையின் பிரதிபலிப்பு' கண்காட்சி கொழும்பில்..!


(எம்.ஜே.எம். தாஜுதீன்)

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு 'இலங்கையின் பிரதிபலிப்பு" என்ற தலைப்பில் கண்காட்சியொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு - கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு என்பவற்றுடன் இலங்கை ஏற்றுமதி அதிகாரசபை- இலங்கை உல்லாசத்துறை ஊக்குவிப்பு பணியகம்-  மற்றும் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அதிகாரச்சபை என்பனவும் இணைந்து இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன. 

நவம்பர் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பத்தரமுல்ல ஜனகல கேந்திர நிலையத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில்  வர்த்தகம்- உல்லாச பிரயாணத்துறை மற்றும் முதலீடு ஆகிய மூன்று பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிரதான ஏற்றுமதி பொருட்கள்- நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் 700 ஏற்றுமதிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.  இலங்கை தேயிலை சபை-  இலங்கை ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரச்சபை என்பனவும் பங்களிப்பு வழங்குகின்றன.

இக்கண்காட்சிக்கு சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள்- கொள்வனவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருகைத் தரவுள்ளனர்.

இக்கண்காட்சியில் தேசிய உற்பத்திகள்- விவசாயம்- இயற்கை வளம்- ஆடை உற்பத்தி- ஆபரணங்கள் உட்பட பல விடயங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.  இக்கண்காட்சியை 14ஆம் திகதி முதல் 17ம் திகதி வரை மக்கள் பார்வையிடலாம்.
  

No comments

Powered by Blogger.