Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு - ஒஸ்மானியா கல்லூரிக்கு உதவ தயார்


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழில் மீள்குடியேறிய முஸ்லிம் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பொன்றை இன்று மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பானது யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது. 

இதன்போது முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரிக்கு பல்வேறு உதவித் திட்டங்களை வழங்க அமெரிக்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக தூதுவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பினைத் தொடர்ந்து ஒஸ்மானியாக் கல்லூரியினை தூதுவர் சுற்றிப் பார்த்ததோடு முஸ்லிம் மாணவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

1 comment:

  1. இந்நிகழ்வில் முக்கிய நபராக ஜனாப் அய்யூப் அஸ்மின் அவர்கள் கலந்துகொண்டதுடன், அமெரிக்கத் தூதுவருடன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடி விடயங்களை எடுத்துரைத்த ஒரே நபராகவும் ஜனாப் அஸ்மின் அய்யூப் அவர்களே இருந்தார்கள். இதனை செய்தியில் குறிப்பிட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.