Header Ads



கசினோ சூதாட்டம் சகல இன மக்களினதும் கலாசாரத்தை சீரழித்துவிடும் - தம்பர அமில தேரர்

உபாய மார்க்க அபிவிருத்தி வேலைத்திட்ட சட்டமூலம் என்ற பெயரில் கசினோவை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இம்மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரவுப்படவுள்ள இந்த சட்டமூலத்துக்கு ஆளும் கட்சியில் உள்ள நாட்டை நேசிக்கும் எம்.பி. க்கள் ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜனநாயகத் தேசியக் கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்து இதனை தோற்கடிக்க முன்வரவேண்டும் என்று ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் இணை ஏற்பாட்டாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான தம்பர அமில தேரர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கு மக்கள் எந்தவொரு விடயம் குறித்தும் தீர்க்கமாக சிந்தித்தே முடிவெடுப்பார்கள். 1977 ஆம் ஆண்டு திறந்த பொருளாதார கொள்கையையும் அவர்கள் முழுமையாக உள்வாங்கவில்லை. எனவே இந்த கசினோவை உள்ளடக்கிய சட்டமூலத்துக்கும் எதிர்ப்பு வெளியிடுவார்கள் என்றே நம்புகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கசினோ சட்டமூலத்தை கொண்டுவந்தால் வீதிக்கு இறங்கி போராடுவதாக அஸ்கிரிய தேரர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். தற்போது வீதிக்கு இறங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது

கசினோ சூதாட்ட செயற்பாட்டை உள்ளடக்கிய உபாய மார்க்க அபிவிருத்தி வேலைத்திட்ட சட்டமூலத்தை இம்மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு ஆதரவாக வாக்களித்து இதனை நிறைவேறுவதற்கு இடமளித்தால் நாட்டின் கலாசாரம் சீர்கெட்டுவிடும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. அத்துடன் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரே இந்த சட்டமூலத்தைகொண்டுவருகின்றார். இது நாட்டின் கலாசாரத்தை சீரழிப்பது என்பது அவரின் மனச்சாட்சிக்கு தெரிந்தும் அவர் இதனை செய்கின்றார்.

இதன்மூலம் கசினோவை இலங்கையில் முன்னெடுக்கவுள்ள வெளிநாட்டு நிறுவனத்துக்கு 25 வருடங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஏன் இவ்வாறு வரிச்சலுகை வழங்கவேண்டும். கசினோவை கொண்டுவருவதே நாட்டுக்கு பாதகமாக அமையும்.

இந்நிலையில் 25 வருட வரிச் சலுகையும் வழங்கப்படுகின்றது. உண்மையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்து விவசாயத்தறையில் அல்லது உற்பத்தித்தறையில் முதலீடுகள் எந்பட்டால் எத்தனை வருடங்களுக்கு என்றாலும் வரிச்சலுகை அளிக்கலாம். நிறைவேற்றப்படவுள்ள சட்டமூலத்தின் பிரகாரம் கசினோ விபசாரம் சூதாட்டம் மற்றும் மதுபாவனை என்பன அனைத்தும் ஒரே வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இது நாட்டின் பெளத்த தர்மத்தையும் அனைத்து இன மக்களினதும் கலாசாரத்தையும் சீரழித்துவிடும். எனவே இந்த விடயம் தொடர்பில் அரசியல் கட்சிகளும் சிவில் சமூக நிறுவனங்களும் சிந்தித்து செயற்படவேண்டிய காலம் வந்துள்ளது. அரசியல் கட்சிகள் இந்த விடயம் குறித்து சிந்திக்கவேண்டும்.

குறிப்பாக இந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு வரும்போது அதனை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என்று கோருகின்றோம். ஆளும் கட்சியில் நாட்டை நேசிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த சட்டமூலத்தை எதிர்க்கவேண்டும். அடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சியினரும் இந்த சட்டமூலத்தை எதிர்க்கவேண்டும். ஜனநாயக தேசியக் கூட்டணியின் எம்.பி. க்களும் இதனை எதிர்க்கவேண்டியது அவசியமாகும்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்கவேண்டும். கசினோ சூதாட்டத்தினால் நாட்டின் அனைத்து இன மக்களும் பாதிக்கக்பபடுவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கு மக்கள் எந்தவொரு விடயம் குறித்தும் தீர்க்கமாக சிந்தித்தே முடிவெடுப்பார்கள். 1977 ஆம் ஆண்டு திறந்த பொருளாதார கொள்கையையும் அவர்கள் முழுயைமயக உள்வாங்கவில்லை. எனவே இந்த கசினோவை உள்ளடக்கிய சட்டமூலத்துக்கும் எதிர்ப்பு வெளியிடுவார்கள் என்றே நம்புகின்றோம்.

இதேவேளை கசினோ சட்டமூலத்தை கொண்டுவந்தால் வீதிக்கு இறங்கி போராடுவதாக அஸ்கிரிய தேரர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். தற்போது வீதிக்கு இறங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே கூறலாம். இது தொடர்பில் இன்று மாலை ( நேற்று) தேரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

இந்த சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பதன் ஊடாக சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டால் அரசாங்கம் கவிழ்ந்துவிடப்போவதில்லை. மாறாக யதார்த்த நிலையை அரசாங்கம் புரிந்துகொள்ளலாம் என்றார். vi

No comments

Powered by Blogger.