பௌத்த விகாரையில் ஐ.தே.க.யின் முக்கிய கலந்துரையாடல் - ரணில்,கரு,சஜித்,கபீர் பங்கேற்பர்
ஐக்கிய தேசிய கட்சியில் தற்சமயம், உத்தேசிக்கப்பட்டுள்ள கட்சியின் ஆலோசனை குழு தலைவர் பதவிக்காக கரு ஜயசூரிய நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 04-10-2013 கொள்ளுப்பிட்டி பொல்வத்த விகாரையில் இடம்பெறவுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, கபிர் ஹசிம், ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரத்துங்க ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment