கல்முனை உதவிக் கல்விப் பணிப்பாளர் முக்தார் கைது செய்யப்படவில்லை - பொலிஸ் பொறுப்பதிகாரி
(யு.எம்.இஸ்ஹாக்)
கல்முனை சாஹிரா கல்லூரியில் இன்று இடம் பெற்ற சம்பவத்தில் உதவிக் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்தி தவறு என கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கபார் தெரிவித்தார்.
பாட சாலையில் இடம்பெற்ற கைகலப்பில் சம்பந்தப்பட்ட இருவரும் சிறிய காயங்களுக்குளாகி உள்ளனர். பிரதி அதிபர் ஏ.கபூர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்திய சாலையிலும், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு இன்று (29) விஜயம் செய்த கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடலுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் சில வகுப்புக்களுக்கு சென்று பரிசோதனை செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து இந்த கைகலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப் படுகின்றது.
இதனையடுத்து கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது பிரதி கல்வி பணிப்பாளரின் மோட்டார் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.
அத்துடன் கல்லூரி அதிபரின் காரியாலயத்தில் இருந்து பிரதி கல்வி பணிப்பாளர் வெளியேறிச் செல்ல முடியாதவாறு மாணவர்கள் திரண்டு சுற்றி வளைத்து- கோஷங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தனர் அங்கு விரைந்த கல்முனைப் பொலிசார் நீண்ட நேர இழுபறிக்குப் பின்னர் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் பொலிசாரினால் சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலையில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதனுடன் சம்பந்தப்பட்ட அதிபர் ஆசிரியர்கள் விசாரிக்கப் படுகின்றனர். அத்துடன் நாளை கல்முனை வலயக்கல்வி பணிப்பாளரையும் விசாரிக்க இருப்பதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கபார் தெரிவித்தார்.
என்ன நடந்தது, எது நடந்தது, யார் கைது செய்யப் பட்டார்கள், யார் கைது செய்யப் படவில்லை என்பதற்கு அப்பால், இது கல்விச் சமூகத்திற்கு மாபெரும் அவமானமும், தலைகுநிவுமாகும்.
ReplyDeleteஇருவருமே கல்வித் துறையில் முன்மாதிரியாக விளங்க வேண்டிய பதவிகளில் உள்ளவர்கள், அத்துடன் முஸ்லிம்கள், ஆகவே இது மிகவும் அவமானமான விடயம்.