நரேந்திர மோடியின் பெயரை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை பயமுறுத்துகின்றன
ஜம்மியத் உலமா இ ஹிந்த் என்ற அமைப்பின் தலைவரான மவுலானா மெகமூத் மதானி நேற்று தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது, கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், மோடியின் பெயரை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை பயமுறுத்தி, வாக்குகளை பெற முயற்சிக்கின்றன.
முஸ்லிம்களுக்கு சம வாய்ப்பு வழங்கக்கூடிய திட்டங்கள் அவர்களிடம் இருக்க வேண்டும். இது தொடர்பாக நான் காங்கிரஸ் கட்சியை குற்றம் சுமத்துவதாக செய்தி வருகிறது. காங்கிரஸ் மட்டுமல்ல, சமாஜ்வாடி கட்சியும் மோடியின் பெயரை பயன்படுத்தி, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற முயல்கிறது. இவ்வாறு மெகமூத் மதானி தெரிவித்தார். inne
Post a Comment