Header Ads



பெற்றோரின் அசமந்த போக்கினால் பிள்ளைகள், குரூர வன்முறைகளுக்கு முகம்கொடுக்கும் நிலைமை

(Sfm) பெற்றோரின் அசமந்த போக்கு காரணமாக இளம் வயதினர் குரூர வன்முறைகளுக்கும், இன்னல்களுக்கும் முகம்கொடுக்கும் நிலைமை உயர்ந்து செல்வதாக காவல்துறை ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேயங்கொடயில் அண்மையில் தாயொருவர் இரண்டு பிள்ளைகளுடன் தொடரூந்து முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டமை மற்றும் நேற்று அதிகாலை கலேவெல பகுதியில் இரண்டு சிறார்கள் தாயாரின் நடத்தை காரணமாக தீக்காயங்களுக்கு உள்ளானமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக குடும்ப கட்டமைப்பில் தோன்றுகின்ற பிரச்சினை மற்றும் சமூக ரீதியாக எதிர்நோக்கப்படுகின்ற நெருக்கடிகள் தொடர்பில் ஆலோசனை மையங்களை நாடாமையே இதற்கு காரணமாகும்.

இதன்பொருட்டு சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.