அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுமாறு மக்கள் கூறுவார்களாயின் அதற்கு தான் தயார் - சஜித்
(Nf) அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுமாறு மக்கள் கூறுவார்களாயின் அதற்கு தான் தயாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர் இதனை தெரிவித்தார்.
மக்கள் ஆணையை தான் மதிப்பதாக குறிப்பிட்ட அவர், ''இது உனக்கு தகுதியில்லை வீட்டிற்கு செல்லுமாறு கூறினாலும் அதற்கும் நான் தயாராகவே உள்ளேன்'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மக்களுக்காக வரலாற்று சிறப்பு மிக்க சேவைகளை ஆற்றவேண்டுமென்பதே தனது பேராசை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ பதவி வகிக்கவேண்டுமென்ற ஆசை தனக்கு கிடையாது எனவும் இவ்வாறான எதிர்பார்புடன் யாராவது ஐக்கிய தேசியக்கட்சியில் இருப்பார்களாயின் அது கட்சியின் ஆதரவாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
''ஜனநாயக விரோத அரசாங்கத்தை விரட்டி அடிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிறந்த யானைகளாக வலது காலை முன்வைத்து செயற்படவேண்டும்'' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment