வடமாகாண முதலமைச்சரின் கருத்துக்கள் எமக்குத் திருப்தியளிப்பதாக இல்லை - தயாசிறி
வடமாகாண முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் அண்மைக்காலமாகத் தெரிவித்து வரும் கருத்துக்கள் எமக்குத் திருப்தியளிப்பதாக இல்லை என வடமேல் மாகாண முதல்வர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபையின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று செவ்வாய்க்கிழமை குருணாகலில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
தாங்கள் பெற்ற வெற்றியின் மூலம் தமிழ்த் தனி இராச்சியமொன்றைத் புலம்பெயர்ந்தோருடன் இணைந்து ஏற்படுத்த முயற்சி செய்தால் வடமேல் மாகாண சபை அதற்கு எதிராக செயற்படும்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் - என்றார்.
Post a Comment