சீசெல்ஸ் தீவுக்கு பறக்கிறது மிஹின் லங்கா
அடுத்த மாதம் முதல் வாரத்துக்கு இரு தடவைகள் சீசெல்ஸ் தீவுக்கான விமான சேவையை மிஹின் லங்கா ஆரம்பிக்கவுள்ளது.
புதன், சனி ஆகிய தினங்களில் மாலை 1.30 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் விமானம் மாலை 4.10 மணிக்கு சீசெல்ஸ் தீவை சென்றடையும். மாலை 5.10 மணிக்கு சீசெல்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம் இரவு 11.00 மணிக்கு கொழும்பு விமானநிலையத்தை வந்தடையும்.
கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீசெல்ஸ் தீவுக்கு சென்றிருந்தார். அதன் பிறகு இரு நாடுகளுக்கிடையில் விமான போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதற்கமையவே சீசெல்ஸ்க்கான விமானசேவையை மிஹின் லங்கா ஆரம்பிக்கவுள்ளது.
இந்த விமானசேவை நாட்டின் வர்த்தக மற்றும் உல்லாசப்பிரயாணத்துறை அபிவிருத்திக்கு உதவியாக இருக்கும். விமானசேவையினால் சீசெல்ஸ் தீவுகளுடன் மாத்திரமன்றி ஆப்பிரிக்க நாடுகளுடனான தொடர்புகளும் மேம்படும் என தாம் நம்புவதாக எயார்லைன்ஸ், மிஹின் லங்கா விமான சேவைகளின் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்தார்.
Post a Comment