நீதிபதிகள், அரச வழக்கறிஞர், பொலிஸ், இராணுவம் ஹிஜாப் அணிய தொடர்ந்து தடை
அரச நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணியும் துருக்கி அரசின் புதிய அனுமதி நேற்று செவ்வாய்க்கிழமை அமுலுக்கு வந்தது. உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவிப்பை தொடர்ந்தே இது அமுலுக்கு வந்தது.
துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டொகன் கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி அறிவித்த ஜனநாயக சீர்திருத்த திட்டத்தின் கீழே பொது நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை அகற்றிக் கொள்ளப்பட்டது. எனினும் ஹிஜாப் தடை நீதிபதிகள், அரச வழக்கறிஞர், பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பினருக்கு தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
அதேபோன்று உள்ளூர் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் பிரதமரின் செயற்பாடு அவரது ரகசிய இஸ்லாமிய நிகழ்ச்சி நிரலுக்கு உதாரணமாக இருப்பதாக ஒருசிலர் விமர்சித்துள்ளனர். Tn
Post a Comment