இலங்கையிலுள்ள ஆய்வு கூடமொன்றில் முதற்தடவையாக முதலைக் குட்டிகள் பிறந்துள்ளன
இலங்கையிலுள்ள ஆய்வு கூடமொன்றில் முதற்தடவையாக முதலைக் குட்டிகள் பிறந்துள்ளன.
ஆசியாவில் வசிக்கும் மிகப்பெரிய முதலை இனத்தைச் சேர்ந்த குட்டிகள் காலி ஹியாரே பகுதியிலுள்ள ஆய்வுகூடத்தில் பிறந்துள்ளமை விசேடம்சமாகும்.
கடந்த 11 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட 32 முதலை முட்டைகள் பேருவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹிக்கடுவை பிராந்திய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அந்த முட்டைகளை காலி ஹியாரே பகுதியில் உள்ள உயிர் பல்வகைமை கேந்திர நிலையத்தின் வனஜீவராசிகள் பாதுகாப்பு சங்க ஆய்வு கூடத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இயற்கை சூழலின் தன்மைகள் குறித்து கவனம் செலுத்தி பின்னர் அந்த முட்டைகள் ஆய்வுகூடத்தில் காக்க வைக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இந்த முதலைக் குட்டிகள் இயற்கை சூழலில் விடுவிக்கப்படவுள்ளன.
Post a Comment