மேர்வின் சில்வாவின் செயலரும், பாதுகாப்பு அதிகாரியும் வீடு திரும்பினார்கள்
மருதானையில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பொதுமக்கள் தொடர்புகள் மற்றும் பொதுமக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச்செயலாளர் ஜே.டி. திலக்கசிரி என்றழைக்கப்படும் ஹட் திலக்கசிரி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியும் வீடு திரும்பியுள்ளதாக பதில் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.
அவ்விருவரும் தாக்கப்பட்டுள்ளதாகவும் மாலபேயிலிருந்து வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு டி.ஆர் விஜயவர்த்தன மாவத்தையில் வைத்து இவ்விருவரும் நேற்று கடத்தப்பட்டதாக பொலிஸார் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விருவரையும் கடத்தியவர்கள் யார். அவர்களை தடுத்துவைத்து விசாரணைகளை நடத்தியோர் யார் என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாக அவர் தெரிவித்தார்.
Post a Comment