Header Ads



காத்தான்குடியில் புத்தாக்கப் போட்டியும், விஞ்ஞானக் கண்காட்சியும்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் உயர்தர பாடசாலை விஞ்ஞான கழகத்தினால் ஏற்பாடு  செய்யப்பட்ட விஞ்ஞான புத்தாக்கக் போட்டியும் அதற்கான கண்காட்சியும் 31-10-2013 கல்லூரியின் பௌதிக மற்றும் இரசாயனவியல் ஆய்வு கூடங்களில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.இஸ்மாலெப்பையினால் கண்காட்சிக் கூடத்தின் நாடா வெட்டப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.றபீக், மீரா பாலிகா மகளிர் உயர்தர பாடசாலை பிரதி அதிபர் ஜனாபா பரீதா அனஸ்,ஆசிரியர் எம்.எஸ்.எம்.நிஸார்,பாடசாலை விஞ்ஞான பாட ஆசிரியைகளான ஏ.எல்.அக்மல் பானு,ஏ.ஸம்றூத்,மற்றும் பாடசாலை அதிபர்கள்,ஆசிரிய ஆசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவிகளுக்கு மத்தியில் விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் நோக்கிலேயே குறித்த கண்காட்சி நடாத்தப்படுவதாகவும் இக்கண்காட்டி இன்றும் நாளையும் நடைபெறும் எனவும் பாடசாலை அதிபர் எம்.இஸ்மாலெப்பை தெரிவித்தார்.





No comments

Powered by Blogger.