காத்தான்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம் (படங்கள்)
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
தேசிய நூலக வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை நூலக குழுவினரால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகினறன.
இதன் ஓர் அங்கமாக மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலமும் கொடி விற்பனையும் இன்று புதன்கிழமை காலை மட்டு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்றது.
சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் நூலகத்தின் முக்கியத்துவம் சம்பந்தமாக எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் பாடசாiலிருந்து மட்டு கல்முனை காத்தான்குடி பிரதான வீதி ஊடாக காத்தான்குடி பிரதான வரவேற்புப் பலகை வரை சென்று அங்கிருந்து மீண்டும் பாடசாலைக்குச் சென்றனர்.
'அமைதியை கற்பிக்கும் இடம் நூலகம்' 'ஒரு நூலகம் திறக்கப்படின் ஆயிரம் சிறைச்சாலை மூடப்படும்' 'சொல்லும் பொருளும் சேர்ந்ததுதான் கல்வி' 'ஆசானை நேசி உன் அறிவுக்கு அர்த்தம் உண்டாகும்' 'நல்ல புத்தகம் நல்ல நண்பன்' 'நன்றே செய் அதை இன்றே செய்' 'உயர்ந்த இலட்சியத்தினை அடைய அதிகம் அதிகம் வாசியுங்கள்'காலடியில் நீ இருந்தால் உன் காலடியில் உலகம் வரும்' உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் இடம்பெற்றனர்.
இவ் ஊர்வலத்தில்; காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை ஆசிரியர்களான எம்.எம்.ஜௌபர்,எம்.எஸ்.அலி அக்பர் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment