கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபினால் அனுப்பப்பட்டுள்ள கடிதம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
கல்முனை மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் வேண்டப்பட்டுள்ள மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று சாய்ந்தமருது மக்களை ஒன்று கூட்டி இது சம்மந்தமாக கலந்துரையாடவுள்ளார்.
இதற்கான அழைப்பை அவர் நேரடியாக தனது உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில் விடுத்துள்ளார். இந்த பிரமாண்டமான கலந்துரையாடல் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபினால் அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பீடத்தால் முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு பணித்துள்ளமை தொடர்பிலும். அதன் பிற்பாடான இன்றைய நிலைமை தொடர்பிலும் உங்களோடு உண்மையை விளக்கவுள்ளேன்.
நீங்கள் எனக்கு வாக்களித்து போராடி பெற்றுத் தந்த அமானிதத்தை இதுவரை இறைவனின் உதவியோடு காப்பாற்றி வருகின்றேன். இது சம்மந்தமாக உங்கள் மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் அறிய ஆவலாயுள்ளேன்.
எமது மண்ணின் மக்களின் தலை விதியையும் தன் மானத்தையும் தீர்மனிக்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருப்பதால் தவறாது சமூகமளிக்குமாறு வேண்டுகின்றேன். இவ்வாறு அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Post a Comment