பள்ளிவாசல் மூலம் மெருகூட்டப்படும் யான் ஓயா கிராமம்
அனுராதபுரம் மாவட்டத்தில் ஹொறவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை வீதியில் யான் ஓயாவுக்கு அருகில் அமைந்துள்ள மிகவும் பின் தங்கிய முஸ்லிம் கிராமம் இந்த யான் ஓயா கிராமமாகும்.
இலங்கையில் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றானது யான் ஓயா ஆறாகும். சிறிமாவோ பண்டார நாயக்க அம்மையாரின் ஆட்சி காலத்தில் இக்கிராமம் உருவானது. இக்கிராமம் ஆற்றுக்கு அருகில் காணப்படுவதால் யான் ஓயா என பெயர் சூட்டப்பட்டது. இக்கிராமத்தை உருவாக்கியவர் ஆதம்பாவா சீனி முகம்மது என தெரியவந்தது. அதனையடுத்து நான் அவ்வயோதிபரை சந்திக்கச்சென்றேன். சென்றபோது தனது கையில் பொல்லுடன் வெற்றிலைக்கு பதிலாக பாவிக்கக்கூடிய சீதலா பறித்துக்கொண்டிருப்பதை அவதானித்தேன். அவருக்கு அருகில் சென்ற போது நீ யார் தம்பி என வினவினார்.
என்னை அறிமுகப்படுத்திய வண்ணமாக அவருடன் பேச ஆரம்பித்தேன். 12 பிள்ளைகள் தனக்கு இருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் எனும் கிராமத்தில் பிறந்து சிறிமாவின் ஆட்சி காலத்தில் றத்மலை பகுதிக்கு எனது மனைவி பிள்ளைகளுடன் வந்தேன். அப்போது அக்கிராமமக்கள் சில உதவிகளை வழங்கினார்கள். அக்கிராமத்தில் இருந்த வண்ணம் நான் யான் ஓயா பகுதிக்கு கால் நடையாக சென்று பெருங்காட்டினை வெட்டி துப்பரவு செய்தேன். என்னுடன் மூன்று குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் சேர்ந்து கொண்டார்கள். அதனையடுத்து முதன் முறையாக பள்ளி வாசல் அமைப்பதற்கு ஒரு சிறிய காட்டுத்துண்டை துப்பரவு செய்து சிறிய குடிசையொன்றினை அமைத்து கூறைக்கு இழுக்கு போட்டு தொழுகைகளை நடாத்தி வந்தோம். 2 வருடங்களுக்கு ஒரு முறை கூறையின் இழுக்கை மாற்ற வேண்டிய நிலை உருவானது. மழைகாலம் கூறையின் ஊடாக தண்ணீர் வடிய ஆரம்பித்தன. கிராமத்துக்கு மக்கள் அதிகம் வரத்தொடங்க பள்ளி வாசல் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. சீனி முகம்மது ஆகிய என்னை தலைவராக தெரிவு செய்தார்கள். கூலித்தொழிலாழியாக இருந்தபோதிலும் பள்ளி வாசலை பரிபாளிக்கும் விடயத்தில் மிகவும் கவனமாக செயற்பட்டேன்.
பின்னர் நான் பள்ளிவாசல் மழைகாலத்தில் ஒழுக்கு வடிவதாக ஹொரவ்பொத்தானை நகரத்தில் இருந்த லக்கி ஹாஐpயார் என்பவரிடம் கூறினேன். சிறிய அளவில் பள்ளி வாசலை சீர்திருத்தி தொழுகையை நடாத்த வழி செய்தார். 2 கிலோமீட்டருக்கு அப்பால் றத்மலை கிராமத்துக்குச் சென்று ஐ_ம்ஆ தொழுகையை மேற்கொண்ட நாம் தற்போது யான் ஓயா கிராமத்திலேயே தொழுகையை மேற்கொண்டு வருவதற்கு பள்ளியை நிர்மாணித்த தந்த இந்த அமைப்புக்கு கிராமமக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என கிராமத்தின் மூத்த வயோதிபர் தெரிவித்தார்.
பள்ளி வாசலின் வளர்ச்சிக்காக பல நிறுவனங்களுடன் தொடர்பு கொண்ட நீண்ட கால முயற்சியின் பயனாக ஐம்யியத்துஸ் ஸாபாப் நிறுவனத்தினால் 20 இலட்சம் ரூபாய் செலவில் அழகிய தோற்றத்தில் மிக குறுகிய காலத்தில் அமைக்கப்பட்டது.
ஐம்மியதுஸ் ஸபாப் நிறுவனத்தின் பணிப்பாளருக்கும்,ஊழியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அக்கிராமத்தின் சமூக நலன்களில் அக்கறையுடன் செயற்படும் இளம் கிராம உத்தியோகத்தர் எஸ்.தாஸிம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மிகவும் பின் தங்கிய முஸ்லிம் கிராமமான இக்கிராமத்திற்கு இப்பள்ளி வாசல் அழகிய தோற்றத்தின் மூலம் இக்கிராமம் மெருகூட்டப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு பள்ளி வாசல் அமையப்பெற வேண்டும் என கடந்த 15 வருடகாலம் கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது. அத்துடன் இக்கிராமத்தில் பள்ளி வாசலைத்தவிர வேறு எவ்வித பொதுக்கட்டடமும் இல்லை. எமது கிராமத்துக்கு பாலர் பாடசாலை ,மைதானம், மையவாடி என்பன தேவையாக உள்ளது. எனவும் தெரிவித்தார்.
இந்த பள்ளி திறப்பு விழாவின் போது இன ஒற்றுமையை வழுப்படுத்தும் நோக்கில் ஐம்மியதுஸ் ஸபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எஸ் எம்.ரஸீட் அடவீரவௌ-வெலங்க உல்பொத்த சிங்கள மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
Post a Comment