Header Ads



நாட்டுக் கோழிக்கு மதுபானம் பருக்கும் அகோரம்

இந்தியா - ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை
உள்ளிட்ட தென்மாவட்டக் கிராமங்களில் நோய் தாக்குதலால் சுருண்டு படுக்கும் கோழிகளுக்கு மருந்தாக ஓரிரு ஸ்பூன் மது கொடுக்கும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராமங்களில் வீடுகள் தோறும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. முட்டைகள் வைத்து குஞ்சுகளாக பொறித்ததை இதற்கென வீடுகளில் உள்ள கூடுகளில் வைத்து நாட்டுக்கோழிகளை வளர்க்கின்றனர். 

பெரும்பாலான கிராமத்தினர் இவற்றிற்கு வீடுகளிலேயே Ôகை வைத்தியம்Õ செய்து கொள்வது வழக்கம். காயங்களுக்கு மஞ்சள் பூசுவது முதல் முட்டை இடாமல் வீட்டு மூலையில் முடங்கிப்படுத்தால் தண்ணீரில் நனைத்து வெயிலில் விடுவது வரை கிராமத்துக் கை வைத்தியங்கள் அதிகம். சுறுசுறுப்பிற்கு இறகை பிடுங்கி அதன் மூக்கு ஓட்டைகளில் செருகி விடுவது, இரவில் தண்ணீர் பாத்திரத்தில் நிற்கவைத்து பெட்டியால் மூடி வைப்பதென கோழிகளை Ôஉஷார்Õபடுத்துவதற்கான வழிகளும் அதிகம். இவ்வரிசையில் ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட கிராமங்களில் சமீபகாலமாக நோய் தாக்குதலில் Ôசுணங்கி நிற்கும்Õ கோழிகளுக்கு ஓரிரு ஸ்பூன் மதுவை மருந்தாக ஊட்டி விடும் பழக்கம் பரவி வருகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம், மேவயல் கிராம விவசாயி கண்ணன் (55) கூறுகையில், ‘‘உண்ட உணவு செரிக்காமல் சோர்ந்து போகும் கோழிகள் அப்படியே பட்டினியாகக் கிடந்து சுருண்டு படுத்து இறந்து விடுவதுண்டு. துவக்கமாக பிராந்தி, விஸ்கி இதில் ஏதாவது ஒன்றை ஒரே ஒரு முறை மட்டும் இரு ஸ்பூன் அளவு எடுத்து கோழிக்கு வாயில் ஊற்றினால் செரிமானம் சீராகி, கோழியும் சுறுசுறுப்பாகி நல்ல நிலைக்குத் தேறி விடுகிறது,‘‘ என்கிறார். கால்நடைத்துறை டாக்டர்களிடம் கேட்டபோது, ‘‘மதுவை, கோழிக்குக் கொடுத்துக் குடிக்கச் செய்வது அதன் உயிருக்கே ஆபத்தாகி விடும்Õஎன்றனர்.

No comments

Powered by Blogger.