அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய ஆசிரியர் அம்சார் 'ஆசிரியர் பிரதீபா பிரபா' பெற்றார்
அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய ஆசிரியர் எஸ் அம்சார் இவ்வாண்டுக்கான ஜனாதிபதியின் உயரிய விருதான 'ஆசிரியர் பிரதீபா பிரபா' பெற்றார்.
மகிந்த சிந்தனை தேசிய புனர்வாழ்வு வேலைத்திட்டத்திற்கேற்ப எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக் கூடிய தேர்ச்சிகள் நிறைந்த தேசத்தின் பிள்ளைகளை இலங்கையின் நற்பிரஜைகளாக சமூகதட்திற்குப் பெற்றுத்தர ஆசிரிய உத்தமராக எல்லையற்ற கருணையுடன் செய்த விலைமதிக்க முடியாத சேவையை கௌரவிக்கும் முகமாக ஆசிரியர்கள், அதிபர்களுக்காக ஜனாதிபதியினால் வழங்கப்படும் உயரிய விருதான 'ஆசிரியர் பிரதீபா பிரபா' எனும் விருது வழங்கும் நிகழ்வு 2011முதல் வருடா வருடம் ஆசிரியர் தினத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இவ்வாண்டுக்கான (2013) விருது வழங்கும் விழா 2013.10.05ம் திகதி மகரகம் தேசிய கல்வி நிருவகத்தில் கௌரவ கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இடம் பெற்றது இந்நிகழ்வில் கௌரவ பிரதம மந்திரி தி.மு.ஜயரத்ன பிரதம விருந்தினராக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விருதுகளை வழங்கி வைத்தார்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தைச் சேர்ந்த 05 ஆசிரியர்களும் 03 அதிபர்களும் இவ்விருதினைப் பெற்றனர்.
விருது பெற்ற ஆசரியர்கள்
1. அக் ஃ அந்நூர் மகா வித்தியாலயம் அட்டாளைச் சேனை எஸ்.அமசார்
2. அக் ஃ ஹிக்மா வித்தியாலயம் பாலமுனை வி.முகாயிரீன்
3. அக் ஃ அல்.இர்பான் மகளீர் கல்லூரி பொத்துவில் எப்.எம்.இர்சாத்
4 அக் ஃ தாறுல்பலாஹ் முஸ்லீம் வித்தியாலயம் பொத்துவில் எம்.ஐ.அமினுத்தீன்
5. அக் ஃ செங்காமம் அல் மினா தியாலயம் அக்கரைப்பற்று ஏ.எல்.றாபீன்
விருது பெற்ற அதிபர்கள்
1. அக் ஃ முஸ்வீம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அக்கரைப்பற்று எம்.ஐ.எம்.சகாப்தீன்
2. அக் ஃ அல் இஸ்ராக் வித்தியாலயம் பொத்துவில் எம்.எல்எம்.றபீக்
3. அக் ஃ அலவதுறானியா வித்தியாலயம் பொத்துவில் எம்.எச்.எம் நவாஸ்
மேற்படி ஆசிரியர்கள்,அதிபர்கள் அக்கரைப்பற்று வலயத்திற்கும் குறித்த பாடசாலைக்கும் பெருமை தேடி தந்தமைக்கு எமது வாழ்த்துக்கள்.
Post a Comment