நவம்பரில் 15 வயது தொடக்கம், புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை
இலங்கையின் சகல பிரஞைகளுக்கும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணக்களம் குறிப்பிடுகிறது.
சர்வதேசத் தரத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு நவம்பரில் விநியோகிக்கப்படவுள்ள புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில், உரிய நபரின் சுயவிபரம்,நிழற்பிரதி,கைவிரல் அடையாளம் மற்றும் இரத்த வகை என்பன உள்ளக்கப்பட்டிருக்கும்.
அத்துடன், வயதுப் பிரிவுக்கேற்ற இத்தேசிய அடையாள அட்டையின் காலாவதித் தினமும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
இதற்கமைய, 15 தொடக்கம் 20 வயதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் அடையாள அட்டையினது பாவனைக் காலம் 10 வருடங்களாகும். 25 தொடக்கம் 30 வயது வரையான வயதுப் பிரிவினருக்கு விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டையின் பாவனைக்காலம் 15 வருடங்களாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைக்கு காலதிவதிக் காலம் இல்லையெனவும் ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment