Header Ads



பௌத்த மதம் தொடர்பில் உணர்வுடன் செயற்படும் பிக்குகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது

பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக் கூடாது என கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உடுகம புத்தரகித்த தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகள் அரசியல் மற்றும் ஏனைய விடயங்களில் தலையீடு செய்வதனால் பௌத்த சாசனம் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அரசியல் செய்யும் தரப்பினர் இருக்கின்றார்கள்.  அவர்களுக்கு தர்ம உபதேசங்களை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியதே பௌத்த பிக்குகளின் கடமையாகும்.

பௌத்த மதம் தொடர்பில் உணர்வுடன் செயற்படும் பிக்குகளின் எண்ணிக்கை கிரமமாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது.

சந்திக்கு சந்தி கூச்சலிட்டு போராட்டம் நடத்தி அரசியல் நடத்துவது பௌத்த பிக்குகளுக்கு உரிய கடமையல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே, அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.