Header Ads



கடற்கரை திருவிழாவில் அழகிய தமிழ் மகள்களாக அபாயப் பெண்மணிகள்

(Abdul Jabar Mohamed Sally)

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமலை கடற்கரையில் நடைபெற்ற தனியார் வானொலி ஒன்றின் கடற்கரை திருவிழாவின் போது அழகிய தமிழ் மகன்,அழகிய தமிழ் மகள் எனும் போட்டி நடத்தப்பட்டது.போட்டியின் போது அறிவிப்பாளர்களால் திருமலையின் அழகிய தமிழ் மகள்கள் யார் என்றும் விரும்பிய 18  வயதிற்கு மேற்பட்ட யுவதிகள் மேடைக்கு வரலாம் என அறிவிப்பு செய்யப்பட்டது. மேடையில் முதலாவது ஏறியது மிகவும் பக்குவமாக அபாயா உடை உடுத்தி வந்த முஸ்லிம் யுவதி அதன் பின்னர் ஒவ்வொருவராக 15 பேர் மேடை ஏறினர். இதில் எழு பேர் முஸ்லிம் யுவதிகள் அதில் இருவர் அபாயா உடை உடுத்திய யுவதிகள். பின்னர் கலந்து கொண்டவர்கள் ஏதாவது ஒலிக்கும் இசைக்கேற்றவாறு நடனம் ஆடவேண்டும்.அறிவிப்பாளரின் அறிவிப்பை தொடர்ந்து ஒரு முஸ்லிம் யுவதி மேடையில் குலுங்கி குலுங்கி ஒரு நடனத்தை தந்தார். இதனைப் பார்த்த அந்த அறிவிப்பாளர் முஸ்லிம் சகோதரிகள் நடனம் புரியத் தேவையில்லை  நின்ற இடத்தில் நின்றவாறே தங்களை அறிமுகம் செய்யலாம் என்று கூறியும் சிலர் ஆடுவதற்கு தயாராக நின்றதை அவதானிக்க முடிந்தது.

அழகிய தமிழ்மகளாக தெரிவான  திருமலை நகர்புறஅபாயா அணிந்த  முஸ்லிம் யுவதி ஒருவர் உடனே மேடைக்கு முன் வந்து ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி பறக்கும் முத்தம் ஒன்றை அளித்தார். இத்தனைக்கும் அவர் ஒரு பாடசாலை மாணவி.இதில் மிகவும் வெறுக்கத்தக்க விடயம் யாதெனில் தமது பெற்றோருடன் வருகை தந்திருந்த மேற்படி யுவதிகள் பெற்றோரே மேடைக்கு அனுப்பி வைத்தமைதான்.அபாயா என்ற புனிதமான ஆடையை இன்று நடன நிகழ்வுகளுக்கும் களியாட்ட இடங்களுக்கும் உடுத்து செல்லும் கேவலத்தை இந்த சகோதரிகள் செய்வதும் அதுவும் பெற்றோர்களின் அனுசரணையுடன் இதனை செய்வதும்  தான் மிக வேதனையான விடயம். அபாயா எனும் ஆடையை அணிந்து வந்தால் மாற்று சமூகத்தவரே மதிப்பளித்த காலம் மாறி இன்று அதனையும் ஒரு சாதாரண ஆடையாக பார்க்கும் நிலைமையை இந்த சகோதரிகள் ஏற்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.மேலும் இன்று முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் இந்த ஆடை விடயத்தில் அனுபவித்து வரும் இன்னல்களுக்கு மத்தியில் இதனை இவ்வாறு மலினப்படுத்துவது மிகவும் அருவருக்கத்தக்கது என பள்ளி நிருவாக சபையினர் குறிப்பிட்டுள்ளனர். எனவே பெற்றோர்கள் மார்க்க விடயத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லவற்றை போதிக்க வேண்டும் பல்லின சமூகத்தில் வாழும் இவர்கள் முன்மாதிரியாக வாழ வேண்டும் என எதிபார்கப்படுகின்றனர். இந்த நிகழ்வில் கிடைத்த பரிசான ரூபா இரண்டாயிரம் இந்த யுவதியின் அழகுக்கு  கிடைத்ததாகும். பத்திரப்படுத்த வேண்டிய அழகை படம் காட்டி பரிசு பெறுவது மார்க்க ரீதியான செயற்பாடு அல்ல என்பதை மனதில் கொண்டு பெற்றோர்கள் செயற்பட வேண்டும் என பள்ளிவாசல்கள் நிர்வாக சபையினர் வேண்டுகின்றனர்.

2 comments:

  1. சில நாட்களுக்குமுன்னர் தென்னிந்திய தொலைகாட்சி, போட்டி நிகழ்ச்சியொன்றில் தோன்றிய முஸ்லிம் சகோதரி தனக்கு சிவகர்த்திகேயன் மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்றார், பக்கத்தில் தன் தாயாரும் இருக்கையிலே, இதே வியாதி தற்போதும் இலங்கையிலும் தொற்றிவுள்ளது, இவ்வாறான சமூக அசிங்கங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள வாலிபர்கள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்

    ReplyDelete
  2. Mr.Mohamed Imthiaz....இந்த மாதிரி உள்ள ஆட்களை திருத்துறது கஷ்டம்...இதுக்கு வேற மாதிரி மருந்து தான் வேலை செய்யும் பேசி பிரயோசனம் இல்லை....இப்ப தென் இந்திய சினிமாவில ஒரு கலக்கு கலக்கும் ஆர்யா, நஸ்ரியா நஸ்ரின், ஜிப்ரான், அஜ்மல் , ஷாம் எல்லாருமே முஸ்லிம்கள் தான்....நம்ம பாடகர் நாகூர் பாபு கூட மனோ என்று இந்துவாகி விட்டார் அவரின் உடம்பில் பளபளக்கும் நகைகளே பார்த்தாலே அவரின் நிலைமை விளங்கும்...இதை விட நிறைய இளைய தலைமுறை முஸ்லிம்கள் சினிமாவுக்குள் வருவதற்கும் குத்தாட்டம் போடவும் தயாராகி கொண்டிருகிறார்கள்..இந்த தென் இந்திய சினிமா மோகம் முதலில் ஒழிக்கப் பட வேண்டும்...தமிழ், இந்தி படங்களை தடை செய்வது இணையத்தை பாவிப்பதை கண்காணித்தல் என்று நாம் இப்போதே முன்னேற்பாடாக நடக்காது விட்டால் நம்மை அந்த ஆண்டவன் கூட மன்னிக்க மாட்டான் ...இவர்கள் மறுமை பற்றிய பயம் இல்லாதவர்கள். இவர்களை நாம் தான் திருத்த வேண்டும்....LTTE வடமாகாணத்தை தமது கட்டுபாட்டில் வைத்திருந்த போது சினிமா பாடல்களை பாடுவது, நடனம் ஆடுவது, திரை படங்கள் காண்பிப்பது எல்லாவற்றையும் தமது கட்டுபாட்டில் வைத்திருந்தார்கள்.இப்போது எந்தக்கட்டுப்பாடும் இல்லை அந்த மக்கள் படும் பாட்டை பார்த்தீர்களா?

    ReplyDelete

Powered by Blogger.