சாதனை படைத்த முஸ்லிம் மாணவனை தமிழ் சமூகம் கௌரவித்தது (படங்கள்)
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருப்பது சமகால நிகழ்வாகும். அந்த வகையில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சகோரர்கள் முஸ்லிம் மாணவர்களையும் சேர்த்து அவர்களுக்கு பெறுமதியான பரிசில்களை வழங்கி கௌரவித்த முன்மாதிரி நிகழ்வொன்று (19.10.2013 -சனிக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது..
மேலும், சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவன் அ.ற. ஸி. ஹனீன் (அம்பாறை மாவட்டத்தில் தமிழ்மொழி மூலம் முதலாம் நிலை – 190 புள்ளிகள்) என்பவருக்கு பெறுமதியான பரிசில்களை வழங்கி கௌரவித்தார்கள் என்பது இங்கு முக்கியமான நிகழ்வாகும். அத்துடன் மேலும் பல முஸ்லிம் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வினை தமிழர் மக்கள் தேசிய முன்னணி என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது அத்துடன் அதன் தலைவர் கஜேந்திர குமார் பொண்ணம்பலம் அவர்கள் தலைமை தாங்க பிரதம அதிதியாக Dr. கோனாமலை கோனேசப்பிள்ளை (கல்விக் கலாநிதி பொலம்பியா பல்கலைக்கழகம், தத்துவ கலாநிதி – மால்பரோ பல்கலைக்கழகம் -இங்கிலாந்து) மற்றும் முஸ்லிம் மகளிர் வித்தியாலய அதிபர் ரீ.எம்.தௌபீக், பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் ஆசிரியையான ஏ.பீ.பரீதாவும் கலந்து கொண்டதுடன் பல சிறப்பு அதிதிகளும் இந் நிகழ்வை சிறப்பித்தார்கள்.
இவ்வாறான நிகழ்வின் ஊடாக கடந்த காலங்களில் சிதைக்கப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் உறவுகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன் வரவேற்கப்பட வேண்டியதுமாகும்.
ஏ.எம். தாஹாநழீம்
In the past,in politics,education and social life,Tamils have honored,helped and highly
ReplyDeleterespected Muslims in Colombo and other parts of the country.If Muslims can understand how important other communities are to them,communal problems they face,will fade away with the passage of time.Not only here,even in Tamil Nadu,Tamils love the friendship and living together with Muslims.Just watch the song competition
of Ajeedh and see how much they loved this little boy's talent and the place they
have given to A R Rahman. Don't try to underestimate or compare Music with Islam
at this moment,I am just trying to take you to another world that's not normally our
interest but we are included, welcome and even cheered all the way to the top.Is it
not wonderful? Is it not lovable and admirable?