கிழக்கு மாகாண முஸ்லிம்களும், இஸ்லாமிய மாதங்களும்..!
(ஏ.எல்.ஜுனைதீன்)
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இஸ்லாமிய அறபுப் பெயர்களை வேறு காரணப் பெயர் கொண்டு அழைக்கும் வழக்கம் தற்போதும் பல முஸ்லிம் பிரதேசங்களில் உள்ளது.
குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் தமது குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் செய்வதற்கு நாள் குறிக்கும் போது இஸ்லாமிய மாதங்களை இஸ்லாமிய அறபு பெயர்களில் கூறாமல் இப்படி வேறு ஒரு காரணப் பெயரால் அழைக்கின்றனர்.
அவ்வாறு பேச்சு வழக்கில் உள்ள மாதங்களின் பெயர்களை தற்போதய இளம் வயதினர் அறிந்து கொள்வதற்காக இஸ்லாமிய அறபுப் பெயர்களையும் பேச்சு வழக்கில் உள்ள மாதங்களின் பெயர்களையும் இங்கு தருகின்றோம்.
இஸ்லாமிய மாதம். பேச்சு வழக்கில் உள்ள மாதம்.
முஹர்ரம் மாதம் பொலிவு மாதம்
ஸபர் மாதம் நெய்னார் முடகடந்த மாதம்
ரபியுல் அவ்வல் மாதம் தலைக் கந்தூரி மாதம்
ரபியுல் ஆகிர் மாதம் கடக் கந்தூரி மாதம்
ஜமாதுல் அவ்வல் மாதம் காதர் கந்தூரி மாதம்
ஜமாதுல் ஆகிர் மாதம் மீரா கந்தூரி மாதம்
ரஜப் மாதம் இறசவு மாதம்
ஸஹ்பான் மாதம் விராத்து மாதம்
ரமழான் மாதம் நோன்பு மாதம்
ஸவ்வால் மாதம் நோன்புப் பெருநாள் மாதம்
துல் கஹ்தா மாதம் இடயிட்ட மாதம்
துல் ஹஜ் மாதம் ஹஜ்ஜி மாதம்
ஆமா ரெம்ப முக்கியம் அந்த காலத்தில் கந்தூரி கலாச்சாரம் இருந்தது இப்போ ஏன்யா அதைப்போய் நினைபடுத்தி மறுபடியும் மக்களை வழிகெடுக்கனும்?
ReplyDeletethis is not our culture but " Jahiliyyath "
ReplyDelete