சிரியாவின் ராணுவ உளவுத்துறை அதிகாரி படுகொலை
சிரியாவின் ராணுவ உளவுத்துறை அதிகாரியை அல் - கொய்தா ஆதரவு பெற்ற குழு சுட்டுக் கொன்றது. கிழக்கு சிரியாவில் ஆயுததாரிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்ட ஜமா ஜமா என்ற அந்த அதிகாரியை சூழ்ந்துக் கொண்ட ஆயுததாரிகள் கண்மூடித் தனமாக சுட்டுக் கொன்றனர்.
அவருடன் பிடிபட்ட 10 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். ஜமா ஜமாவின் படுகொலைக்கு அய்ஷா பின் அல் - சாதிக் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ருட்டில் உள்ள சிரியா ராணுவ தலைமை செயலகத்தில் உளவுத்துறை அதிகாரியாக ஜமா ஜமா பணியாற்றிய போதுதான் லெபனான் பிரதமர் ரபீக் ஹரிரி 2005-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்திற்கு மிகவும் நெருக்கமானவராகவும் ஜமா ஜமா கருதப்பட்டார்.
அலெப்போ நகரின் வடக்கு மாகாணமான ஹீஜைரா மற்றும் ஒபைடா நகரங்களில் போராளிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 20 ராணுவ வீரர்களும் 7 போராளிகளும் பலியாகினர்.
இதேபோல் டல் அரன் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 10 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர்.
Post a Comment