Header Ads



காத்தான்குடியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உளவியல் செயலமர்வு


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உளவியல் செயலமர்வு ஆரையம்பதி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் என்.அசோக் பெர்னான்டோ தலைமையில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுவர் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி சித்ரா கலமநாதன், ஆரையம்பதி பொதுச்சகாதார வைத்திய அதிகாரி திருமதி யாமினி அச்சுதன்,ஆரையம்பதி சிறுவர் பாதுகாப்பு உளநல உத்தியோதகத்தர் ஆர்.சரோஜினி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுவர் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி சித்ரா கலமநாதனினால் விசேட விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

இவ்வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள் செயலமர்வுகளில் இது இரண்டாவது செயலமர்வாகும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் என்.அசோக் பெர்னான்டோ தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.