திருகோணமலை துறைமுகத்தில் ரஷ்யாவின் பாரிய ஏவுகணைப் போர்க்கப்பல் (படங்கள்)
ரஷ்ய கடற்படையின் பாரிய ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்றும், விநியோக கப்பல் ஒன்றும் நட்புறவுப் பயணமாக 04-10-2013 திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் மரபுரீதியான வரவேற்பை அளித்துள்ளனர்.
வர்யக் என்ற பெயர் கொண்ட, 187 மீற்றர் நீளமான ஏவுகணைப் போர்க்கப்பலும், பொரிஸ் புடோமா என்ற 162 மீற்றர் நீளமான விநியோகக் கப்பலுமே திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.
வர்யக் போர்க்கப்பலில், 65 அதிகாரிகள் உள்ளிட்ட 529 கடற்படையினரும், பொரிஸ் புடோமா கப்பலில், 75 மாலுமிகளும் பணியாற்றுகின்றனர்.
ரஷ்யக் கடற்படையின் பசுபிக் கப்பற்பிரிவைச் சேர்ந்த இந்தக் கப்பல்கள், வரும் 8ம் நாள் வரை திருகோணமலையில் தரித்து நிற்கவுள்ளன. இதன்போது, இலங்கை கடற்படையினருடன் இணைந்து, ரஷ்யக் கடற்படையினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.
Post a Comment