கொழும்பில் பாடசாலை அதிபரை குடையால் தாக்கிய ஆசிரியை
கொழும்பு பொரல்லை ரத்னாவளி கல்லூரியின் அதிபரை ஆசிரியை ஒருவர் குடையினால் தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளான அதிபர் பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று நடந்த இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு தரப்பினரையும் அழைத்து பிரச்சினையை சுமூமாக முடிவுக்கு கொண்டு வர பொலிஸார் முயற்சித்தனர்.
அந்த முயற்சி பலனளிக்காத நிலையில், முறைப்பாட்டை இணக்கச் சபை ஒன்றிடம் சமர்ப்பிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
Post a Comment